வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 18வது நாளை எட்டியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
18வது நாளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. டெல்லிக்கு அருகே உள்ள பகுதிகளில் இருந்து போராட்டத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் குவிந்து வருகின்றனர். இதனால் எல்லைப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி-உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள சில்லா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், போக்குவரத்து இயக்கத்திற்கான சாலையை திறந்துள்ளனர். இதுகுறித்து பேசிய விவசாயிகள், பாதுகாப்பு மற்றும் வேளாண் அமைச்சர்களை சந்தித்து பேசியதாவும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அவர்கள் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தனர். எனவேதான், சாலையைத் திறந்துவிட்டதாகவும் விவசாயிகள் கூறினர்.