முக்கியச் செய்திகள் தமிழகம்

டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!

டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரி கடல் பகுதியில், வளிமண்டலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் உயரம் உரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

ஏனைய உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தவரை தென் கடலோர மாவட்டங்களில், ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் 11 சென்டி மீட்டரும், பரமக்குடி, பரங்கிப்பேட்டை தலா 7 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கேரளாவில் அரங்கேறிய ருசிகரம் – முறைப்படி வரன் பார்த்து நாய்களுக்கு திருமணம்

Saravana Kumar

மிஸ் யுனிவர்ஸ் 2021: யார் இந்த ஹர்னாஸ் சாந்து?

Ezhilarasan

பிரேம்ஜி மீது சிவகார்த்திகேயனுக்கு என்ன கோபமோ?

Halley Karthik

Leave a Reply