முக்கியச் செய்திகள் தமிழகம்

டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல சுழற்சி காரணமாக உள் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக மிதமான மழை பெய்துவருகிறது. குமரிக்கடல் அருகே நிலைக்கொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், வெயில்காலத்தின் நிலவக்கூடிய வெப்பச்சலனம் காரணமாகவும், மழை பெய்துவருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று கூறிய முன் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகமான கன்னியாகுமரி, தூத்துகுடி போன்ற மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்திருந்த நிலையில், இன்று காலை முதலே டெல்டா மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் பரவலாம மழை பெய்துவருகிறது.

மேலும் விருதுநகர், தென்காசி, மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு உள் மாவட்டம் மற்றும் தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி ஒட்டி இருக்க கூடிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:

Related posts

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை: ஸ்டாலினுக்கு சீமான் பதிலடி!

Gayathri Venkatesan

ரயில் நிலையத்துக்குள் செல்ல புதிய கட்டுப்பாடு!

Karthick

இரவு நேரங்களில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கத் தடை!

Karthick