தமிழகம்

டிச.18ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம்: தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அறிவிப்பு!

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 18-ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்தக் குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியன், போராடும் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு உண்மைக்குப் புறம்பாக அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்தார். போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவி இருப்பதாக கூறுவது விவசாயிகளை கொச்சைப்படுத்தும் நடவடிக்கை என்று கூறிய அவர், டெல்லி விவசாயிகள் அழைப்பை ஏற்று, நாளை முதல் தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க இருக்கிறார்கள் என்றும் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”அதிமுக கூட்டணியில் பாஜக; பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” – செங்கோட்டையன்

G SaravanaKumar

தமிழ்நாட்டில் குறைந்த வேலைவாய்ப்பின்மை விகிதம்

EZHILARASAN D

புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…. டிவிட்டரில் வைரலாகும் விராட்கோலி கைது ஹேஸ்டேக்

EZHILARASAN D

Leave a Reply