
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் கரையை கடந்த பிறகு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தெற்கு ஆந்திராவில் நிலை கொண்டுள்ளதாகவும், இதனால் கடந்த 24 மணி நேரத்தில் ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் மழை பெய்திருப்பதாகவும், அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 23 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி உருவாகும் என்றும், வரும் 30-ம் தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவித்தார். இது பின்னர் புயலாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனால் டிசம்பர் 1 முதல் 3 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல் தற்போது வரை 29 செமீ மழை பதிவாகியிருப்பதாகவும், இது இயல்பை விட 15% குறைவு என்றும் பாலச்சந்திரன் கூறியது குறிப்பிடத்தக்கது.