அமெரிக்க அதிபராக ஜோபைடன் பொறுப்பேற்பதற்கு போட்டியாக ட்ரம்ப் ஆதரவாளர்களும் பதவி ஏற்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்று அடுத்த மாதம் 20 ஆம் தேதி அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார். எனினும் டிரம்ப் ஆதரவாளர்கள் ஜோபைடனின் வெற்றியை இன்னும் கூட ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். இந்த நிலையில் ஜோபைடன் அதிபராகப் பொறுப்பேற்கும் ஜனவரி 20 ஆம் தேதி டிரம்ப் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்பது போல முகநூல் வாயிலாக பதவி ஏற்பு விழா நடத்தவும் அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டாவது முறையாக டிரம்ப் அதிபராகப் பதவி ஏற்பு என்று இதனை டிரம்ப் ஆதரவாளர்கள் அழைக்கின்றனர். முகநூலில் நடைபெறும் டிரம்ப் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். தங்களது ஓட்டுரிமை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக இதுபோன்ற பதவி ஏற்பை நடத்துவதாக டிரம்ப் ஆதரவாளர்கள் கூறி உள்ளனர்.