செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டி: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடு

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசு மேலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது

.புதிய வழிகாட்டு நெறிமுறை:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

1) ஜல்லிக்கட்டு காளைகளுடன் வழக்கமாக 5 முதல் 6 பேர் வரை வரும் நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு காளைகளுடன் காளை உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் என இருவர் மட்டுமே வர வேண்டும்

2) ஜல்லிக்கட்டு காளையுடன் வரும் காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர் இருவரும் கொரோனோ பரிசோதனை செய்து கொரோனோ இல்லை என்ற உறுதி சான்று பெற வேண்டும்

3) காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும்

4) அடையாள அட்டை இல்லாதவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை

5) ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு போட்டி நடைபெறும் 7 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கும் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்

6) அடையாள அட்டை இல்லாத மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி இல்லை

7) தமிழக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனோ தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்

8) நடைமுறைகளை மீறுபவர்கள் உடனடியாக ஜல்லிக்கட்டு வளாகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்

9) ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்து துறை அலுவலர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் கொரோனோ பரிசோதனை செய்து கொரோனோ தொற்று இல்லை என சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு கடந்த 23 ஆம் தேதி அனுமதி அளித்து இருந்த நிலையில் தற்பொழுது மேலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆபாச மெசேஜ்: நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு புகார்

Gayathri Venkatesan

டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

Web Editor

கமல்ஹாசனுக்கு முதல்முறையாக வில்லனாகும் நடிகர்

Web Editor

Leave a Reply