அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னையில் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறும் என கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை வானகரத்தில் ஜனவரி 9ஆம் தேதி கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அவை தலைவர் மதுசூதனன் தலைமையில், கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்படும் என்றும், கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழுடன் வரவேண்டும், என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்