கொரோனா தொற்றுக்கு பிந்தைய சைக்கிள் உற்பத்தி அதிகரித்துள்ளதால் போர்ச்சுக்கல் நாட்டின் சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள் உற்சாகம் அடைந்துள்ளன.
மனிதகுலத்தை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் இதுவரை சந்திக்காத முடக்கத்தை சந்தித்தது. ஆசிய, ஐரோப்பியா, அமெரிக்கா உட்பட அனைத்து பகுதிகளிலும் மனிதனின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியானது. குறிப்பாக பொருளாதார நடவடிக்கைகள் பின்னுக்குத்தள்ளப்பட்டு வேலைவாய்ப்பின்னை அதிகரிக்க தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

போர்ச்சுக்கல் நாட்டில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஐரோப்பியாவின் மிகப்பெரிய சைக்கிகள் தயாரிப்பு சந்தை மூடப்பட்டது. போர்ச்சுக்கல் நாட்டில் தயாரிக்கப்படும் சைக்கிள்களுக்கு இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நல்ல வரவேற்பு உண்டு. அங்கு தயாரிக்கப்படும் சைக்கிள்களில் 90% ஏற்றுமதியை நம்பியே உள்ளது. இந்த சூழலில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் தலைநகர் லிஸ்பனில் உள்ள 50க்கும் அதிகமான சைக்கிள் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் நிலை கேள்விக்குறியானது. கடந்த மார்ச்சிற்கு பிறகு தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் சைக்கிள் தயாரிப்பு தொழிற்சாலைகள் புத்துணர்ச்சியுடன் செயல்பட தொடங்கி உள்ளது.

கொரோனா தொற்றால் தங்களுக்கு ஒருவித லாபம் ஏற்பட்டுள்ளதாக சைக்கிள் தயாரிப்பு தொழிலாளர்கள் கருதுகின்றர். ஏனெனில், பொது மக்கள் வெகுவாக பொது போக்குவரத்தை குறைத்துக் கொண்டு சைக்கிள் அல்லது இர சக்கர வாகனங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிகளவிலான சைக்கிள்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக உற்சாகமாக கூறுகிறார். ப்ரூனோ சால்கடோ.

மேலும் அவர் கூறுகையில்,
“ஊரடங்கால் நேரபோகும் துயரம் குறித்து மிகக்கவலை அடைந்தோம். ஆனால் நெருக்கடி காலம் எங்களுக்கு முன்பை விட சிறந்த ஆசிர்வாதத்தை அளித்துள்ளது. பொது மக்கள் கூட்டமாக பயணிக்க அச்சப்படுகின்றனர். எனவே சைக்கிள் பயணத்தை பெருமளவு விரும்புகின்றனர். சிறிய வைரஸ் அனைவரையும் சைக்கிள் பக்கம் திருப்பியுள்ளது. தற்போது எங்கள் நிறுவனத்தில் (RTE Bikes) 8000 அதிகமான தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் தினமும் 5,000 சைக்கிள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த வருடம் 1.1 மில்லியன் சைக்கிள்களை உற்பத்தி செய்தோம். இந்த வருட் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்ற ஆவலோடு இருக்கிறோம்.” என்றார்.

கடந்த முறை கோடைக்காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கில் உற்பத்தி செய்த சைக்கிள்கள் கிட்டத்தட்ட விற்பனை செய்யப்பட்டு விட்டன. வரும் குளிர்காலத்தில் தொற்றின் பரவல் அதிகரித்தால் சைக்கிள்கள் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாட்டில் சைக்கிள் தயாரிப்பு 42% உயர்ந்துள்ளதாகவும், 2021ம் ஆண்டுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான சைக்கிள்கள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. கொரோனா தாக்கம் மட்டுமில்லாது ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கும் சைக்கிள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எது எப்படியோ போர்ச்சுக்கலுக்கு கொண்டாட்டம் தான்.