ஐதராபாத் மருத்துவமனையில் இருந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், இன்று சென்னை திரும்பினார்.
‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ரஜினிக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. எனினும் பாதுகாப்பு கருதி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதுடன், ரஜினிகாந்த் ஐதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இந்நிலையில், ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக, ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில், கடந்த 25ந் தேதி நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு, அங்கிருந்து காரில் புறப்பட்ட ரஜினிகாந்த், ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து, தனி விமானம் மூலம், சென்னை திரும்பினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில், வெளியிடப்பட்ட அறிக்கையில், ரஜினியின் ரத்த அழுத்தம் சீராகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் நன்கு உடல் நலம் தேறியதையடுத்து, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு வாரம் நடிகர் ரஜினிகாந்த் முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என்றும், அவ்வப்போது ரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றும், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இலகுவான உடற் செயற்பாடுகளையே ரஜினிகாந்த் மேற்கொள்ள வேண்டும் என்றும், மன அழுத்தத்தை தவிர்க்கும் வகையில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது