சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமையவுள்ள பேருந்து நிலைய பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் துறை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும் வகையில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணி கடந்த 2019-ம் தேதி பணி தொடங்கப்பட்ட நிலையில், 95 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், விரைவில் திறக்கப்படவுள்ள பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இறுதிகட்டப் பணிகளை அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.