தமிழகம்

சூரப்பா விவகாரம் : விசாரணை அதிகாரிக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம்!

அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா நேர்மையானவர் என விசாரணை அதிகாரி கலையரசனுக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பா முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடா்ந்து சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு விசாரணைக் குழுவை அமைத்தது.
3 மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் சூரப்பாவிற்கு ஆதரவாக விசாரணை அதிகாரி கலையரசனுக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அதில் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தில் அரசியல் தலையீடு, இடைத்தரகர்களின் தலையீட்டை முடிவுக்கு கொண்டு வந்தவர் சூரப்பாதான் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகத்தை மாற்றியவர் சூரப்பா எனக் தெரிவித்துள்ள அந்த கூட்டமைப்பு, உண்மையில், ஊழல் எங்கு நடைபெற்றது என்று உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என விசாரணை அதிகாரி கலையரசனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இதுவரை இல்லாத அளவு; 11,000த்தை கடந்து பதிவான கொரோனா பாதிப்பு!

Jeba Arul Robinson

தனியார் நிறுவனத்தில் சிபிஐ பறிமுதல் செய்த 103 கிலோ தங்கம் மாயம்: துறை ரீதியிலான விசாரணைக்கு சி.பி.ஐ உத்தரவு!

Saravana

முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய ஆட்டோ டிரைவர்!

G SaravanaKumar

Leave a Reply