அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான புகார்கள் தொடர்பான விசாரணையில் பதிவாளர் கருணாமூர்த்தி 2வது நாளாக ஆஜரானார்.
சூரப்பா மீதான முறைகேடு புகார்கள் தொடர்பாக ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக புகார் தொடர்பான ஆவணங்களை பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி ஆணையத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து 2வது நாளாக ஷ அவர் விசாரணையில் ஆஜராகி கூடுதல் ஆவணங்களையும் ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாமூர்த்தி, விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வருவேன் என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புகார்கள் தொடர்பான முகாந்திரம் இருப்பின் அடுத்தக்கட்டமாக துணைவேந்தர் சூரப்பாவுக்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு உள்ளதாக ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது.