இந்தியா

சீனா தனது எல்லைப் பகுதிகளில் நிறைய உள்கட்டமைப்புகளை செய்து வருகிறது : ராஜ்நாத் சிங்

லடாக் நிலைப்பாடு குறித்து இந்தியா-சீனா பேச்சுவார்த்தைகளின் எந்த அர்த்தமுள்ள முடிவுகளும் எடுக்கப்படவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், இந்தியா-சீனா இடையேயான மோதலை குறைப்பதற்காக, ராணுவம் அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவது உண்மைதான் என ஒப்புக்கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ராணுவ மட்டத்திலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது வேண்டுமானாலும் நடைபெறும் என தெரிவித்தார். பாகிஸ்தான் எல்லையில், தீங்கு விளைத்த தீவிரவாத முகாம்களை அழிக்க முடியும் என்பதை நமது ராணுவ வீரர்கள் நிரூபித்து உள்ளதாகவும் கூறினார்.

மேலும், சீனா தனது எல்லைப் பகுதிகளில் நிறைய உள்கட்டமைப்புகளை செய்து வருகிறது என்றும், எந்தவொரு நாட்டையும் தாக்குவதற்காக தாங்கள் உள்கட்டமைப்பை உருவாக்கவில்லை எனவும் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரதமர் மோடியின் தாயார் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Jayasheeba

ஆபாசப் பட விவகாரம்: பிரபல நடிகையின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

Gayathri Venkatesan

கியூட் தேர்வை நீட், ஜே.இ.இ தேர்வுடன் இணைப்பது எப்போது? யுஜிசி தலைவர் விளக்கம்

G SaravanaKumar

Leave a Reply