சீனாவில் தென்மேற்கு நகரமான சோங்கிங்கில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் கார்பன் மோனாக்சைடு விஷவாயு தாக்கியதில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
உலகில் கனிம வளங்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக சீனாவும் இருந்து வருகிறது. இங்கு பல்வேறு மாகாணங்களில் ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அபாத்தான சுரங்கங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த சுரங்கங்களில் கடந்த சில மாதங்களாக விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் பலர் இதுவரை உயிரிழப்பை சந்தித்துள்ளனர். இதனிடையே பாதுகாப்பு இல்லாத நிலக்கரி சுரங்கங்களை கண்டுபிடித்து அதனை மூடும் பணிகளில் சீன அரசு ஈடுபட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அந்நாட்டின் தென்மேற்கு நகரமான சோங்கிங்கில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் தீடிரென கார்பன் மோனாக்சைடு விஷவாயு கசிவு ஏற்பட்டது. அப்போது அந்த சுரங்கத்தின் உள்ள வேலை பார்த்து வந்த 24 பேரில் 18 பேர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதேபோல் கடந்த செப்டம்பர் மாத பிற்பகுதியில் சோங்கிங்கில் உள்ள சாங்சாவோ நிலக்கரி சுரங்கத்தில் கார்பன் மோனாக்சைடு விஷவாயு சுரங்கத் தொழிலாளர்கள் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.