உலகம் தொழில்நுட்பம்

சீனாவில் முழுக்க முழுக்க எந்திர மயமாக இயங்கும் உணவகம்!

சீனாவில் முழுக்க, முழுக்க எந்திர மயமாக இயங்கும் உணவகம், வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சீனாவின் ஷென்சென் நகரில் அந்த நவீன உணவகம் செயல்பட்டு வருகிறது. சமையலறையில் தயாராகும் உணவுகள், அங்கிருந்து நவீன பிங்க் பெட்டி மூலம் வாடிக்கையாளர்களின் மேசைகளுக்கே நேரடியாக கொண்டு செல்லப்படுகிறது.

பிங்க் பெட்டி, மேசைக்கு அருகில் வந்தவுடன், அதிலிருந்து உணவுகளை எடுத்து வாடிக்கையாளர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். அதேபோல், ரோபோ மூலமும் வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் உணவு எடுத்துச் செல்லப்படுகிறது. கொரோனா காலத்தில், இந்த நவீன உணவகம் அதிகபடியான வாடிக்கையாளர்களை விரும்பி வரச் செய்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும்;உலக சுகாதார அமைப்பு தகவல்!

Saravana

கோத்தபய ராஜபக்சே தப்பிக்க உதவிய தமிழர்!

Web Editor

உக்ரைன் – ரஷ்யா போர்; பெட்ரோல், டீசல் விலை உயருமா?

G SaravanaKumar

Leave a Reply