தமிழகம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை குறித்து இன்று ஆர்.டி.ஓ விசாரணை!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது குறித்து, இன்று ஆர்.டி.ஓ விசாரணை நடைபெறுகிறது.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை குறித்து, அவரது கணவரிடம் நேற்று 5-வது நாளாக நசரத்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஹேமந்தின் தந்தை, சீரியல் இயக்குநர், தயாரிப்பாளர், ஓட்டல் ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடமும், போலீசார் விசாரணை செய்து முடித்துள்ளனர். இதுவரை ஹேமந்திடம் நடத்திய விசாரணையில் அவர் சில மாறுபட்ட தகவல்களை தெரிவித்து வருவதால் மேலும் சில தகவல்களை கேட்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சித்ராவின் தாயாருக்கு ஹேமந்தை பிடிக்கவில்லை என்றும் இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது. அதனால்தான் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தற்கொலைக்கு முன்பு படப்பிடிப்புத் தளத்தில் இருந்து, ஹோட்டல் அறைக்கு வந்த சித்ரா, ஹேமந்தை வெளியே அனுப்பிவிட்டு, நீண்ட நேரம் அவரது தாயாருடன் செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தாயாருடன் பேசும்போது ஏற்பட்ட மன உளைச்சல் ஒருபுறம், கணவரை விட்டுப் பிரியமுடியாத மன உளைச்சல், ஆகியவை காரணமாக, சித்ரா தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

சித்ரா தற்கொலைக்கு யார் காரணம் என்பது உறுதியானதும், அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்படும், என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருமணம் நடந்த ஒரு ஆண்டுக்குள் சித்ரா உயிரிழந்ததை அடுத்து, ஆர்டிஓ விசாரணை இன்று தொடங்கவுள்ளது. நடிகை சித்ராவின் பெற்றோர், ஹேமந்தின் பெற்றோரிடமும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரிடமும், அம்பத்தூர் ஆர்டிஓ விசாரணை செய்ய உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ அலுவலகத்தில் சித்ராவின் பெற்றோரிடம் ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்த உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

1.32 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது: சத்ய பிரதா சாகு

முதலமைச்சர் பழனிசாமிக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்!

Halley Karthik

சென்னை: AC மயமாகும் புறநகர் ரயில்கள் – பயணிகள் மகிழ்ச்சி

EZHILARASAN D

Leave a Reply