சின்னத்திரை நடிகை சித்ரா உயிரை மாய்த்துக் கொண்டார் என பிரதே பரிசோதனைக்குப் பிறகு போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனியார் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வந்த சித்ரா, நேற்று அதிகாலை தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில், தனது வருங்கால கணவர் ஹேமந்துடன் தங்கி இருந்தபோது அவர் உயிரிழந்துள்ளார். தனது மகளின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கக் கோரி, சித்ராவின் தந்தை காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு சித்ராவின் உடல், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். சித்ராவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படும் நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை இந்த வழக்கில் அதிகம் உற்று நோக்கப்பட்டது. இதனிடையே, அவர் உயிரை மாய்த்துக் கொண்டார் என, பிரேத பரிசோதனைக்கு பின்னர், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சித்ரா கடைசியாக தங்கியிருந்த ஓட்டலில், சிசிடிவி காட்சிகள் இல்லை என ஊழியர்கள் கூறியதையடுத்து, அதன் பின்னணி குறித்தும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். ஓட்டல் ஊழியர்கள் மூவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.