2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய பெண்ணிடம் காதலை வெளிப்படுத்திய இந்திய வாலிபர், ஆஸ்திரேலிய பெண்ணுக்கு மோதிரம் அணிவிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே சிட்னி மைதானத்தில் 2வது ஒரு நாள் போட்டி நடைபெற்று வந்த அதே நேரத்தில் இந்திய வாலிபருக்கும், ஆஸ்திரேலிய பெண்ணுக்குமிடையிலான காதல் பறிமாற்றம் மேட்சை விட பரபரப்பாக மாறியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் அருகாமையில் இருந்த ஆஸ்திரேலிய பெண்ணிடம் மோதிரத்துடன் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆச்சரியத்தில் உறைந்த அப்பெண் இந்திய வாலிபரின் காதலை ஏற்றார். இருவரும் கட்டிப்பிடித்து தங்களின் காதலை வெளிப்படுத்தினர். ஆஸி பெண் காதலுக்கு பச்சை கொடி காட்டிய பின்னர் மைதானத்திலேயே அவருக்கு மோதிரம் மாற்றிவிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது!