ஹரியானா மாநிலம் குர்காமில் வயதான 2 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் மினி வேனை கொண்டு மருத்துவமனையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குர்கானில் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வயதான நோயாளிகள் இரண்டு பேரில் யாருக்கு முதலில் சிகிச்சை அளிப்பது என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு நோயாளின் உறவினர் ஒருவர், தான் வைத்திருந்த சரக்கு மினி வேனை எடுத்து வந்து மருத்துவமனையின் மீது பலமுறை மோதினார். இதில் மருத்துவமனையில் முகப்பு மற்றும் மருந்தகம் உள்ளிட்டவை முழுவதும் சேதமடைந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரை தொடர்ந்து குர்கான் காவல்துறையினர் சம்மந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.