மதுரை அருகே சாலையோரம் மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தைக்கு, பொன்னியின் செல்வன் என பெயர் சூட்டிய காவல்துறையினர், அக்குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிக்க மதுரை செல்லூர் பகுதி மேம்பாலம் அருகே, குழந்தையின் அழுகுரல் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் அருகில் சென்று பார்த்தனர். அங்கு பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், குழந்தையை மீட்டு, பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். அக்குழந்தைக்கு பொன்னியின் செல்வன் என பெயர் சூட்டிய சட்ட ஒழுங்கு காவல்துணை ஆணையர் லில்லி கிரேஸ், மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தார். இந்தக்குழந்தை மாவட்ட தத்துவள மையத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும், யாரேனும் குழந்தையை தவறவிட்டிருந்தால் மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.