முக்கியச் செய்திகள் இந்தியா

சாமானியர்களுடன் …தெற்கே ராகுல்; வடக்கே ப்ரியங்கா

அசாமில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தேயிலை தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலைகளை பறித்தார்.

அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல், மார்ச் 27-ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதற்காக, அசாமில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 2 நாள் சுற்றுப்பயணமாக, நேற்று அசாம் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அங்கு தேர்தல் பரப்புரையை தொடங்கினார். நேற்று காமக்யா கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்த பிரியங்கா காந்தி, லக்கிம்பூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

இந்நிலையில், இன்று பிஸ்வாத் பகுதியில், தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரியங்கா காந்தி, அங்குள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து, தேயிலை பறித்தார். மேலும், பிரம்மபுத்ரா ஆற்றின் வடக்குக் கரையில் பகுதியில் உள்ள பல மாவட்டங்களில், பிரியங்கா காந்தி பரப்புரை மேற்கொண்டார்.

Advertisement:
SHARE

Related posts

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் சிறைத்துறை டிஐஜி ராஜினாமா!

Jayapriya

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழுவதும் விலக்களிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!

Ezhilarasan

பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தேர்தல் பரப்புரை!

Halley karthi