ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், சர்வதேச அளவில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வீரர் நடராஜன் தொடக்கத்திலேயே விக்கெட் எடுத்து அசத்தினார்.

முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், 3வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 302 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்ட்யா 92 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். ரவீந்திர ஜடேஜா, கேப்டன் விராட் கோலி ஆகியோரும் அரை சதம் அடித்தனர்.இதையடுத்து, 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, சர்வதேச அளவில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வீரர் நடராஜன் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடக்க ஆட்டக்காரரான லபுஷேனே 7 ரன்களை எடுத்த நிலையில், நடராஜன் வீசிய பந்தில் ஸ்டெம்புகளை பறிகொடுத்தி கிளீன் போல்டு ஆனார்.இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.