சமையல் எரிவாயு விலையை இனி வாரம் ஒரு முறை நிர்ணயிக்கும் வகையிலான முறை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் பொதுத்துறை எண்ணைய் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்கள் விலையில் தினமும், ஏற்ற இறக்கங்கள் நிலவுவதால் வாரத்துக்கு ஒருமுறை எரிவாயு விலை மாற்றப்படலாம் என்று தெரிகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்போது மாதம் ஒரு முறை எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனை குறைக்க வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் வாரம் ஒருமுறை எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படும் பட்சத்தில் மேலும் விலை உயரவே வாய்ப்பு ஏற்படும் என்று தெரிகிறது.