சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜைகள் இன்று தொடங்குகின்றன
கொரோனா பாதிப்பு காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரிசோதனை முடிவுகள், ஆன்லைன் முன்பதிவு இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் இன்று தொடங்குகின்றன. கொரோனா காரணமாக இன்று 5,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15 ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து வாரத்தின் முதல் ஐந்து நாட்கள் 2,000 பக்தர்களுக்கும், இறுதி நாட்கள் 3,000 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இன்று நடைபெறும் மண்டல கால பூஜைக்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஆரன் முளா பார்த்த சாரதி கோயிலில் இருந்து 453 சவரன் தங்க அங்கி புறப்பட்டது. நான்கு நாட்கள் பயணத்திற்கு பிறகு நேற்று மாலை திரு ஆபரண பெட்டி சபரிமலை கொண்டு வரப்பட்டு ஐயப்பருக்கு சாத்தப்பட்டது.