முக்கியச் செய்திகள் தமிழகம்

“சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் சக்தியுடன் அதிமுக மிகப்பெரிய வெற்றிபெறும்” – முதல்வர் பழனிசாமி

சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் சக்தியுடன் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் முதல்வர் பழனிசாமி, அவரது சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். முதலாவதாக பெரிய சோரகை பகுதிக்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு, அப்பகுதி மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். பூக்கள் தூவி, மேளதாளம் முழங்க அதிமுக தொண்டர்களின் உற்சாக வரவேற்பால், அப்பகுதியே விழாக்கோலம் பூண்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து அங்குள்ள சென்றாயர் பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி, சிறிது தூரம் முதலமைச்சர் நடந்து சென்றார். தொடர்ந்து, பெரிய சோரகையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இதையடுத்து திறந்த வாகனத்தில் நின்றவாறு முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை அதிமுக அரசு நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். தமிழகத்திற்கு பல்வேறு புதிய தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர், சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் சக்தியுடன் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் கூறினார். தொடர்ந்து தமிழக அரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர் பழனிசாமி, எடப்பாடி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதாக கூறினார். கொரோனா விவகாரத்தில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். 7.5% உள்ஒதுக்கீட்டால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவு நனவாகி உள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Halley Karthik

காங்கிரஸ் பொறுப்பாளர்கள் திடீர் ஆலோசனை

Web Editor

இந்தியாவில் முதல் முதலாக கொரோனா பாதிக்கப்பட்ட மாணவிக்கு மீண்டும் தொற்று

Gayathri Venkatesan

Leave a Reply