9 மாதகால இடைவேளைக்குப் பிறகு சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இருந்து சுவாமி வீதி உலா சென்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் கடந்த 21ஆம் தேதி திருவாதிரை திருவிழா நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் தொடங்கியது இதனையடுத்து வழக்கமாக நடைபெறும் சுவாமிகள் வீதி உலா இதுவரை நடைபெறாமல் இருந்தது. இதனையடுத்து வழிபாட்டு அமைப்புகள் இந்து அறநிலைத்துறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தொடர்ந்து கோரிக்கை மனுக்களை கொடுத்த வண்ணம் இருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வழிபாட்டு குழுவினர் மற்றும் பக்தர்கள் அமைப்புகள் கோவிலில் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்திருந்தனர் இதனையடுத்து கோவில் நிர்வாகம் சுவாமி சப்பர சிறப்பு அனுமதி அளித்தது இன்று வழக்கமாக நடைபெறும் சப்பரபவனி வீதிஉலா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கோவிலில் உள்ள குடைவரை வாசலில் சுவாமி அம்பாள் 63 நாயன்மார்களுக்கும் பஞ்ச மூர்த்திகளுக்கும் காட்சி அளிக்கும் வைபவம் நடைபெற்றது.
சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு பூஜைகள் தீபாராதனையும் நடைபெற்றது.கடந்த 9 மாதங்களாக எந்தவொரு வீதிஉலா நிகழ்வும் நடைபெறாமல் இருந்தது. இன்று முதலாவதாக சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார்கள் வீதி உலா வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.