முக்கியச் செய்திகள் இந்தியா

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை அதிகரிப்பு!

தனியார் மருத்துவமனைகள் மற்றும் மாநிலங்களுக்கு வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதிகரித்துள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலின் 2வது அலை நாடு முழுவதும் புயல் வேகத்தில் பரவி வருகிறது. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளில் 50 சதவீதம் மத்திய அரசுக்கும், 50 சதவீதம் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதிகரித்துள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 250 ரூபாயாக இருந்த தடுப்பூசியின் விலை தற்போது மாநில அரசுகளுக்கு 400 ரூபாய் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் விற்பனையாகும் தடுப்பூசியை விட இது குறைவுதான் என்றும் சீரம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மே-1ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டால் மதுக்கடைகள் மூடப்படும் – முதலமைச்சர் எச்சரிக்கை!

Gayathri Venkatesan

“EWS பிரிவினர் சமூகம்&கல்வியில் பின் தங்கியவர்கள் இல்லை” – உச்சநீதிமன்றம்

Halley karthi

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதுமா?

Gayathri Venkatesan