முக்கியச் செய்திகள் சினிமா

கோவா சர்வதேச திரைப்பட விழா: அசுரன், கப்பேலா, சுச்சேரா ஆகிய படங்கள் தேர்வு!

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) கடந்த 1952ம் ஆண்டு முதல் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா ஒத்திவைக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் 51-வது கோவா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மொழித் திரைப்படங்களுடன் சேர்த்து இந்திய மொழித் திரைப்படங்களும் திரையிடப்படும். அந்த வகையில், இந்திய பனோரமா பிரிவில் 2 தமிழ் படங்கள் திரையிட தேர்வாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த அசுரன் படம் மற்றும் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தேன்’ திரைப்படமும் திரையிடப்படவுள்ளது. இவற்றில் தேன் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் மலையாள பிரிவில் அன்னா பென் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற கப்பேலா திரைப்படம் தேர்வாகியுள்ளது. காதலை மையாக கொண்டு உருவான இத்திரைப்படத்தை முஸ்தபா இயக்கியிருந்தார். இதே போன்று இந்தி பிரிவில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான சிச்சோரா திரைப்படம் தேர்வாகியுள்ளது. இத்திரைப்படம் தற்கொலைக்கு முயலும் மகனுக்கு தோல்வியை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என தந்தை உணர்த்தும் விதமாக உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரதமர் மோடி இந்தியாவின் எல்லைப் பகுதியை சீனாவிடம் விட்டுக் கொடுத்துவிட்டார் – ராகுல் காந்தி

Jayapriya

அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தை அடுத்து ஜெயம் ரவி எடுக்கும் புது அவதாரம்

Sugitha KS

கார் ஓடையில் கவிழ்ந்து இளம் நடிகை காதலருடன் பலி

EZHILARASAN D

Leave a Reply