உலகம்

கொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்கு பரவும்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் தொற்று பொதுமக்களின் மூக்கு வழியாக மூளைக்கு பரவுவது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் ஒருபுறம் நடைபெறும் நிலையில் நோய் பரவலுக்கான காரணம் மற்றும் நோய் பரவும் விதம் தொடர்பாகவும் உலக சுகாதார அமைப்பு உட்பட பல அமைப்புகள் ஆராய்ச்சில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பொதுமக்களின் மூக்கு வழியாக மூளைக்கு பரவுவது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நேச்சர் நியூரோ சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், SARS-CoV-2 சுவாசக் குழாயை பாதிப்பது மட்டுமல்லாமல், மத்திய நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது, இதன் விளைவாக வாசனை இழப்பு, சுவை, தலைவலி, சோர்வு மற்றும் நரம்பியல் அறிகுறிகள் ஏற்படுகிறது. மேலும் இந்த் ஆராய்ச்சியில் மூளை மற்றும் செரிப்ரோஸ்பைனல் திரவத்தில் வைரஸ் இருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்த வைரஸ் மூளைக்குள் எவ்வாறு நுழைகிறது என்பது தெளிவாக தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜெர்மனியின் சரைட் யுனிவர்சிட்டாட்ஸ்மெடிசன் பெர்லின் ஆராய்ச்சியாளர்கள் மூக்கின் நாசி குழியை இணைக்கும் தொண்டையின் மேல் பகுதியில் வைரஸ் தொற்று பரவியதை கண்டறிந்தனர். SARS-CoV-2 RNA, வைரஸின் மரபணுப் பொருள் மற்றும் மூளை மற்றும் நாசோபார்னெக்ஸில் உள்ள புரதங்கள் இருப்பதைக் கண்டறிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்,

Advertisement:
SHARE

Related posts

அமெரிக்காவிலும் பரவிய ஒமிக்ரான்

Saravana Kumar

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டன் மைதானதில் நடைபெறும்,ஐ.சி.சி வெளியீடு!

Halley Karthik

உக்ரைன் விவகாரம்: புதினுடன் 7ஆம் தேதி பேசுகிறார் பைடன்

Arivazhagan CM

Leave a Reply