செய்திகள்

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முதல் கட்டப்பணிகள் மும்பையில் தீவிரம்!

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முதல் கட்டப்பணிகள் மும்பையில் தீவிரம் அடைந்துள்ளன.

இந்தியாவில், கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்கு ஆளான மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. எனினும் தீவிர நடவடிக்கையால், தற்போது தொற்று பரவல் அங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கிடையே, கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி அடுத்த மாதத்தில், தயாராகி விடும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. எனவே அதிக பாதிப்புகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்கான குளிர்பதன சேமிப்பு கிடங்குகள் அமைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. குறிப்பாக மும்பை மாநகராட்சி சார்பில் தடுப்பூசிகளை உரிய வெப்ப நிலையில் சேமித்து வைப்பதற்காக கஞ்சூர் மார்க் பகுதியில் ஒரு சேமிப்பு வசதி புதிதாக உருவாக்கப்பட்டு வருகிறது.

இது தவிர மும்பை மாநகராட்சியின் நான்கு மருத்துவமனைகளிலும் சேமிப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அனைத்துப் பணிகளும் வரும் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கூறி உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

Jeba Arul Robinson

எய்ம்ஸ் குழு உறுப்பினராக ரவீந்திரநாத் தேர்வு!

எல்.ரேணுகாதேவி

காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஒரு வளர்ச்சியும் ஏற்படவில்லை : ரங்கசாமி!

EZHILARASAN D

Leave a Reply