கொரோனா தடுப்பூசி போடும் போது மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே போடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும், முதல் டோஸ் போடப்பட்ட தடுப்பூசிதான் இரண்டாவது டோஸிலும் போடப்படப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. முதல் டோஸில் ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியும், இரண்டாவது டோஸில் வேறு ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியையும் ஒருவருக்குப் போடக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தடுப்பூசி ஒவ்வாமை உள்ள நபர்கள், உணவு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, அலர்ஜி உள்ளவர்களுக்கு தடுப்பூசிகள் போடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஆனால், இன்னும் உறுதி செய்யப்பட்டாத பெண்களுக்கும் தடுப்பூசி போடக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களுக்கு 4 முதல் 8 வாரங்கள் கழித்துத்தான் தடுப்பூசிபோட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிளாஸ்மா தெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் அல்லது வேறு நோய்கள் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்களும் அவர்கள் குணம் அடைந்த தில் இருந்து 4 முதல் 8 வாரங்கள் கழித்துத்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.