முக்கியச் செய்திகள் உலகம்

கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் 90% வெற்றி: உலக சுகாதார அமைப்பு பெருமிதம்!

கொரோனா தொற்று தடுப்பூசிகளின் பரிசோதனைகள் 90% அளவுக்கு வெற்றி பெற்றிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கிலாந்து, ரஷ்யாவில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அமெரிக்காவிலும் அவசரப் பயன்பாட்டுக்காக தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் புரூஸ் அயில்வார்டு, கொரோனா தொற்றுத் தடுப்பூசி கண்டுபிடிப்புக்கான பரிசோதனைகள் பெரும் அளவுக்கு வெற்றி பெற்றிருப்பதாக கூறினார்.

ஆனால், இப்போது உடனடியாக எத்தனை டோஸ் தடுப்பூசி கிடைக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இப்போது மிக சிலரே கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருவதாக கூறிய அவர், தடுப்பூசிகளை அதிக எண்ணிக்கையில் தயாரிப்பதுதான் பெரும் சாவல் என்றும் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி அதிக டோஸ்கள் தயாரிக்கப்பட்டால்தான் தொற்றை தடுக்க முடியும் என்று புரூஸ் அயில்வார்டு கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

பழைய ஸ்கூல் பஸ்சை நடமாடும் வீடாக்கிய குடும்பம்!

Halley Karthik

கட்டுமான பொருட்கள் கடையில் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

Arivazhagan CM

அனிருத் இசையில் ஆடிப்பாடி ஆட்டம்போடும் கமல்!

Vel Prasanth

Leave a Reply