கொரோனாவுக்கு சோதனை அடிப்படையிலான தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் ஹரியானா அமைச்சர் அனில் விஜ்ஜிற்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியிருக்கும் கோவேக்ஸின் கொரோனா தடுப்பூசியின் மனித சோதனை (3ம் கட்டம்) இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் ஒரு அங்கமாக ஹரியானா அமைச்சர் அனில் விஜ்ஜிற்கு நவம்பர் 20ம் தேதி கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் முதல் நபராகவும் அவர் இருந்தார்.
இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார். ஹரியானா மக்களிடையே இது பரபரப்பாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.