தமிழகம்

கொரோனா தடுப்பூசிக்கு டெல்லி அரசு தயாராக உள்ளது; முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் தகவல்!

டெல்லி அரசு கொரோனா தடுப்பூசிக்கு தயாராக உள்ளதாக முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ள சுகாதார மற்றும் முன்களப்பணியாளர்கள் உட்பட 51 லட்சம் பேரை அடையாளம் காணும் பணி முடிவடைந்ததாக கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், ஒவ்வொரு நபருக்கும் இரண்டு டோஸ் கிடைக்கும் என்பதால், முதல் கட்ட தடுப்பூசி ஒரு கோடி பேருக்கு தேவைப்படும் என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது 74 லட்சம் டோஸை சேமிக்கும் திறன் தங்களிடம் உள்ளதால், இது ஒரு வாரத்திற்குள் ஒரு கோடியாக உயர்த்தப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரயில்களில் பட்டாசு எடுத்து செல்ல தடை- அதிகாரிகள் எச்சரிக்கை

G SaravanaKumar

“மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டத்திற்கு வரவேற்பில்லை” – அமைச்சர் பெரியகருப்பன்

Halley Karthik

2001- 02 கல்வியாண்டிலிருந்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு அரிய வாய்ப்பளித்த அண்ணா பல்கலைக்கழகம்

EZHILARASAN D

Leave a Reply