விளையாட்டு

கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக புகார்; இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைதாகி விடுதலை!

கொரோனா தடுப்பு விதிகளை மீறியதால் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சொந்த காரணங்களுக்காக விலகிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தற்போது குடும்பத்துடன் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்பு பெருவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக இன்று காலை சுரேஷ் ரெய்னாவை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மும்பை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் ரெய்னாவை கைது செய்த காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சுரேஷ் ரெய்னா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கேளிக்கை விடுதியில் இந்ததாலும் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாலும் ரெய்னா கைது செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் சுரேஷ் ரெய்னா மட்டுமின்றி பாலிவுட் பிரபலங்கள் உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மொராக்கோவுக்கு எதிரான போட்டியில் தோல்வி; பெல்ஜியத்தில் கால்பந்து ரசிகர்கள் வன்முறை

G SaravanaKumar

காமன்வெல்த்; பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம்

G SaravanaKumar

இளவட்டக்கல் தூக்கும் போட்டி: பெண்கள் தீவிர பயிற்சி

Arivazhagan Chinnasamy

Leave a Reply