கொரனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து சிவகங்கை மாவட்டத்தில் வரும் 4ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.
முதல்வர் பழனிசாமி, மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வளர்ச்சிப் பணிகள் பற்றி ஆய்வு செய்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக, சென்னையிலிருந்து 4-ம் தேதி மதுரை செல்லும் முதல்வர், அம்மாவட்ட மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைத்திடும் வகையில் முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்பு சிவகங்கை மாவட்டத்திற்கு சென்று அங்கு நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார். இதற்காக அவர் வரும் 4ம் தேதி சென்னையிலிருந்து மதுரைக்கு புறப்படுகிறார்.