செய்திகள்

“கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” – சுகாதாரத்துறை செயலாளர்

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால், காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்கிலாந்தில் இருந்து அல்லது இங்கிலாந்து வழியாக வந்த 2,724 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், தமிழகத்தில் ஆங்காங்கே பொதுமக்கள் முகக்கவசம் அணியாத நிலை தொடர்வது வருத்தமளிக்கிறது எனக்கூறிய அவர், பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இது புதுவகை கொரோனா வைரஸ் அல்ல என்றும், அது உருமாறி உள்ளதால் மக்கள் பதட்டப்படாமல், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் யாருக்கேனும் அறிகுறிகள் இருந்தால், அதனை மறைக்காமல் மற்றவர்களுக்கு தீங்கு நேரக்கூடாது என்ற எண்ணத்தோடு முன்வந்து அரசிடம் தெரிவித்து உரிய சிகிச்சை பெற வேண்டும் என்றும் ஜெ. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

Advertisement:

Related posts

தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை

Gayathri Venkatesan

சிறுமி பாலியல் வன்கொடுமை: பிரபல டி.வி. நடிகர் போக்சோவில் கைது!

Karthick

சட்டப்பேரவையில் எஸ்டிபிஐ கட்சியின் குரல் ஒலிக்க வேண்டும் – திருமுருகன் காந்தி!

Gayathri Venkatesan

Leave a Reply