முக்கியச் செய்திகள் இந்தியா

“கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்

கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கான முறையான சிகிச்சை, இறந்துபோன கொரோனா நோயாளிகளின் உடல்களை கண்ணியமாக கையாளுதல், அடக்கம் செய்தல் தொடர்பாக தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கொரோனா சிகிச்சை, மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தோம். அதனடிப்படையில் கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின் தொகுப்பை சமர்ப்பித்துள்ளோம் என்றார்.

அப்போது நீதிபதிகள், கொரோனா மருத்துவமனைகளின் மொத்த எண்ணிக்கை குறித்தும், தீ தடுப்பு நடவடிக்கைகளை குறித்தும் எந்த ஒரு மாநிலமும் எண்ணிக்கை சார்ந்த விவரங்களை அளிக்கவில்லையே என கேட்டனர். இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, குஜராத் மாநிலத்தில் மொத்தம் 328 மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீ தடுப்பு ஆய்வுக் கூடங்களும் மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

பின்னர், குஜராத்தில் 214 மருத்துவமனைகளில் 61 மருத்துவமனைகள் தீயணைப்பு துறையிடமிருந்து தடையின்மை சான்றிதழை பெறவில்லையே, இந்த மருத்துவமனைகளில் தீ விபத்துக்கள் நேரிட்டால் நோயாளிகளின் நிலை என்னாவது என நீதிபதிகள் கேட்டபோது, தீயணைப்பு துறையிடமிருந்து தடையின்மை சான்றிதழை பெறாத மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கலாம். ஆனால் கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இதுபோன்ற மருத்துவமனைகளும் தேவைப்படுகிறது என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் அளித்தார்.

இதற்கு நீதிபதிகள், தீயணைப்பு துறையிடமிருந்து தடையின்மை சான்றிதழை பெறாத மருத்துவமனைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என நாங்கள் கூறவில்லை. கொரோனோ மருத்துவமனைகள் சிகிச்சை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீ பாதுகாப்பு ஆய்வறிக்கையையும், ஒருங்கிணைப்பு அதிகாரிகளையும் பிற மாநிலங்கள் நியமிக்கவேண்டும் என்றனர்.

இதையடுத்து முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என கேட்டபோது, முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள், முகக் கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை கோடிகளை தாண்டுமே என கேட்டனர்.முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து குஜராத் மாநிலத்தில் மட்டும் இதுவரை 90 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார், அப்போது நீதிபதிகள், ஒரு மாநிலத்தில் மட்டுமே ரூ. 90 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கவில்லையா என கேட்டனர். முகக் கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் 500 ரூபாய் அபராதம் போதுமானதாக இல்லை என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

அரசியல் பேரணி பொதுக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அவற்றுக்கான கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் என்ன என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அரசியல் பேரணி பொதுக் கூட்டங்கள் நடைபெற அனுமதிக்கப்படும் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.

கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு போதுமான ஓய்வு அளிக்கப்படுவதில்லை என்ற புகார் உள்ளதே அவர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் என கேள்வி எழுப்பியபோது, இவை குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என்று துஷார் மேத்தா தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள் வழக்கை வரும் வெள்ளி கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”திமுக, அதிமுகவுக்கு மாற்று, தேமுதிக தான்”- விஜய பிரபாகரன்!

Jayapriya

முழு ஊரடங்கில் மெட்ரோ ரயில் சேவை ரத்து!

EZHILARASAN D

சிஸ்டம் தோல்வியடைந்து விட்டதால், மக்களின் குரல்தான் முக்கியம்: ராகுல் காந்தி!

EZHILARASAN D

Leave a Reply