கொரோனா காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க குளிர்கால கூட்டத்தொடரை கூட்டகோரி, காங்கிரஸ் மக்களவைத் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கடிதம் எழுதினார். இதற்கு பிரகலாத் ஜோஷி எழுதியுள்ள பதில் கடிதத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் கொரோனா பரவலை தவிர்ப்பதற்காக குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்ய ஆதரவு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரை விரைவாக நடத்த அரசு தயாராக உள்ளதாகவும், ஆனால், கொரோனாவால் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை மனதில் வைத்து, ஜனவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது தான் சரியானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு தாங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரகலாத் ஜோஷி கேட்டு கொண்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்