வணிகம்

கொரோனா ஊரடங்கு எதிரொலி: யுபிஐ வழியாக செய்யப்படும் பணப்பரிமாற்றம் 80% அதிகரிப்பு!

இந்தியாவில் யு.பி.ஐ வழியாக மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றத்தின் எண்ணிக்கை இந்த ஆண்டு 200 கோடியாக அதிகரித்துள்ளதாக நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு (UPI – Unified Payment Interface) வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் பின்னர் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்து ஒவ்வொரு மாதமும் யு.பி,ஐ வழியாக செய்யப்படும் பணப்பரிமாற்றங்களில் எண்ணிக்கை (Number of Transaction) நல்ல வளர்ச்சியை அடைந்து வந்தது. இருப்பினும் கடந்த ஏப்ரல் மாதத்தில் பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை மற்றும் பரிமாற்றம் செய்யப்படும் பணத்தின் அளவு இரண்டுமே சரிந்தது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக யு.பி.ஐ பணபரிவர்த்தனையின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு 80% வளர்ச்சியை கண்டுள்ளது. இது தொடர்பாக தெரிவித்துள்ள நீத்தி ஆயோக்கின் தலைவர் அமிதாப் கண்ட், இந்த ஆண்டு அக்டோபரில் யு.பி.ஐ பரிவர்த்தனை 200 கோடியை கடந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் யுபிஐ பணப்பரிவர்தனை எண்ணிக்கை 114 கோடியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 80% அதிகரித்து கடந்த மாதம் 207 கோடி பரிவர்த்தனைகளாக அதிகரித்துள்ளது. பரிவர்த்தனையின் மதிப்பு 1,91,359.94 கோடியாக 101 சதவீதம் உயர்ந்து 3,86,106.74 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

Gayathri Venkatesan

இப்போ இதுதான் ட்ரெண்ட்… ஆடைகளாக மாறும் சாக்குப் பைகள்!

Dhamotharan

கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதா: மத்திய அரசு முடிவு

Halley Karthik

Leave a Reply