கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் என விளம்பரம் செய்யக்கூடாது என்று ஆயுஷ் மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவுக்கான மருந்துகளை ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியுமா? என்பது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், ஆயுஷ் மருத்துவர்கள் கொரோனாவுக்கு புதிதாக மருந்துகளை பரிந்துரை செய்வதற்கு தடை விதித்தது. கேரள உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக டாக்டர் ஏ.கே.பி. சத்பாவனா என்பவர் ஹோமியோபதி மருத்துவமனை சார்பில் மனுதாக்கல் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி அசோக் பூசண் தலைமையிலான அமர்வு, கொரோனாவுக்கான மருந்துகளை ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துரைக்கும்போது, ஆயுஷ் அமைச்சகம் கடந்த மார்ச் 6ம் தேதி வெளியிட்ட வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. குறிப்பாக கொரோனோ நோயாளிகளுக்கு பாரம்பரிய முறையில் சிகிச்சை அளிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யவும் அரசு அங்கீகரித்த மாத்திரைகள், மூலிகை கலவைகளை கொண்டு ஆயுஷ் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கலாம் எனவும் தீர்ப்பளித்தனர்.