முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனாவுக்கு கோயில் கட்டும் 90 வயது முதியவர்

கொரோனோ மூன்றாவது அலையை தடுக்க ஆண்டிபட்டி அருகே கொரோனோ கோயிலை உருவாக்கும் முயற்சியில் 90 வயது முதியவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத்தடுப்பதற்கான முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அத்துடன் மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த வேண்டி, கோவை இருகூர் பகுதியில் கடந்த ஆண்டு, கொரோனா தேவி சிலையை நிறுவி வழிபாடுகளை மேற்கொண்ட சம்பவம், மக்களின் கவனத்தை பெற்றது.

இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த 90 வயது ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர் ராஜரத்தினம் என்பவர், தனது விவசாய தோட்டத்தில் கொரோனா கோயில் கட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக கோயிலுக்கான பெயர் பலகையை வைத்துள்ள அவர், விரைவில் கோயில் கட்டும்பணியை தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!

Jayapriya

ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று: அமைச்சர் பொன்முடி

Ezhilarasan

அமேசானில் தற்போது நண்பர்களுடன் பாடல்களை பகிர்ந்து கொள்ளலாம்!

Niruban Chakkaaravarthi