கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தாலும் கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என பிரிட்டன் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக பிரிட்டனும் இருந்து வருகிறது. இங்கு கடந்த ஜனவரி மாதம் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனை அடுத்து அந்நாட்டு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் தொற்று ஜூன் ஜூலை மாதங்களில் பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. இதனிடையே பிரிட்டன் அரசு கொண்டு வந்த ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து அங்கு கொரோனா வைரஸின் இரண்டாம் அலை வீசத்தொடங்கியுள்ளது. இதுவரை அங்கு கொரோனாவால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 59,000க்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை அடுத்து நோய் பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்க அமெரிக்காவின் ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு வழங்க பிரிட்டன் அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாடுட்டுக்கு வரவுள்ளதால் மக்கள் அலட்சியமாக நடந்துகொள்ளக்கூடாது, கொரோனாவுக்கு எதிரான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை, எனவே வரும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.
தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான சுயாதீன கூட்டுக் குழுவின் ஆலோசனையின் படி, முதல் கட்டமாக சுதாராப் பணியாளர்கள், நோய் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.