கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மேலும் 20 கோடி மக்கள் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் தீவிர வறுமை நிலைக்கு செல்வார்கள் என ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு தொழில்துறைகளும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இதன் காரணமாக சர்வதேச பொருளாதாரமும் கடந்த 8 மாதங்களில் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இதனிடையே இந்த நோய் பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள வேலையிழப்பு, சுகாதாரப்பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏலை மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக வறுமையில் சிக்கித்தவிக்கும் ஆசியா ஆப்பிரிக்க கண்டங்களில் உள்ள ஏலைநாடுகள் பொருளாதார அளவில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் அந்நாடுகளில் வறுமையில் தள்ளப்படுபவர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்து வருகிறது. இதனை தடுக்க ஐநா சபை மற்றும் சர்வதேச அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மேலும் 20 கோடி மக்கள் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் தீவிர வறுமை நிலைக்கு செல்வார்கள் என ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐநா மற்றும் டென்வர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்
தொற்றுநோயின் கடுமையான தாக்கத்தின் நீண்டகால விளைவுகளாக உலகில் மேலும் 207 மில்லியன் மக்களை தீவிர வறுமை நிலைக்கு செல்லக்கூடும். இது 2030 ஆம் ஆண்டில் மொத்தம் வறுமைக்கு தள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும். இதில் வறுமை நிலைக்கு தள்ளப்படும் பெண்களின் எண்ணிக்கை 10 கோடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் இந்த தாக்கம் காரணமாக நோய் பாதிப்புக்கு முன்னர் இருந்த வளர்ச்சி தற்போது தடைபடும், அடுத்த தசாப்தத்தில் சமூக பாதுகாப்பு / நலத்திட்டங்கள், ஆளுகை, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் ஒரு பசுமை பொருளாதாரம் ஆகியவற்றின் வளர்ச்சிகளின் மூலம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வறுமை நிலையை தடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.