முக்கியச் செய்திகள் சினிமா

கொரோனாவால் உயிரிழந்த 34 வயது சின்னத்திரை நடிகை!

மும்பையை சேர்ந்த 34 வயது சின்னத்திரை நடிகை திவ்யா பாத்நகர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

Ye Rishta Kya Kehlata hai, Sanskaar, Udaan, Jeet Gayi Toh Piyaa Morre, Vish, Sanware Sabko Preeto உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை திவ்யா பாத்நகர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மும்பையில் தனியாக வசித்து வந்த இவருக்கு கடந்த நவம்பர் மாத இறுதியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மும்பை செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். திவ்யாவில் உடல்நிலை குறித்து அறிந்த அவரின் தாயாரும், சகோதரரும் டெல்லியில் இருந்து மும்பைக்கு விரைந்தனர்.

இதனிடையே திவ்யாவின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.

நிமோனியாவாலும், அதிக ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருந்ததால் திவ்யாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ஒரு வார காலம் தீவிர சிகிச்சசை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை திவ்யா உயிரிழந்தார்.

https://www.instagram.com/p/CIeXpdYFGBu/?utm_source=ig_web_copy_link

நடிகை திவ்யா பாத்நகரின் மரணம் குறித்து அறிந்த சக நடிகர்கள் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பரில் தான் திவ்யாவுக்கு திருமணமாகியிருந்தது. இருப்பினும் அவரின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திவ்யா தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை’ – ஈவிகேஎஸ்.இளங்கோவன்

Web Editor

கார்கேவா? சசிதரூரா? காங்கிரஸ் தலைவர் இன்று அறிவிப்பு

EZHILARASAN D

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2000 – காங்கிரஸின் அசத்தல் தேர்தல் வாக்குறுதி

G SaravanaKumar

Leave a Reply