கொடைக்கானல் மலைகிராமத்தில் நடைபெற்ற சேத்தாண்டி திருவிழாவில், இளைஞர்கள் சேற்றை உடம்பில் பூசி கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர்
கொடைக்கானலில் கீழ்மலை பகுதிகளில் உள்ள பட்டாளம்மன் முத்தாலம்மன் கோயில் திருவிழா, கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் இறுதி நாளான இன்று, கரியாமல் சுவாமிக்கு சேத்தாண்டி வேடம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, பண்ணைக்காடு உள்ளிட்ட மலை கிராமங்களை சேர்ந்த ஆண் பக்தர்கள், ஒருவர் மீது ஒருவர் சேற்றை அடித்தும், சேத்தாண்டி வேடம் போட்டும் ஊருக்குள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர். சேற்றை அடித்து முத்தாலம்மனை வேண்டுவதால், தங்களுக்கு நோய் நொடிகள் வருவதில்லை என, அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர். இத்திருவிழாவில் ஏராளமாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்