கே.ஜி.எஃப் இயக்குனர் பிரஷான்த் நீல் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. தற்போது ‘யுவரத்னா’ மற்றும் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2’ ஆகிய படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகண்தூர் தங்களது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அறிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ‘டார்லிங்’ பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தை ‘கே.ஜி.எஃப்’ படங்களின் மூலம் நம்மை அசரவைத்த இயக்குநர் பிரஷான்த் நீல் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகவுள்ள புதிய இந்த படத்தின் பெயரை நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சலார் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.