கேரளா இடுக்கி அணையை பார்க்க இன்று முதல் ஜன. 16 வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இடுக்கி மாவட்டத்தில்மின்வாரிய கட்டுப்பாட்டில் உள்ள இடுக்கி அணை பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். இடுக்கி அணை ‘ஆர்ச்’ வடிவிலும்இ செருதோணி அணை நேர் வடிவிலும் அருகருகே கட்டப்பட்டுள்ளது. அதில் தண்ணீர் ஒன்றாக தேங்கும் என்பதால் அணை நிரம்பும்போது கடல் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். அணையின் தண்ணீரைக் கொண்டு மூலமற்றம் நீர்மின் நிலையத்தில் 780 மெகாவாட் மின்உற்பத்தி நடக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆண்டு முழுவதும் அணைபாதுகாப்பு வளைத்திற்குள் உள்ளதால் எளிதில் யாரும் செல்ல முடியாது.வார விடுமுறை நாட்களில் அணையை பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் படுகின்றனர். ஓணம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது குறிப்பிட்ட காலத்திற்கு அனைத்து நாட்களிலும் பயணிகள் அனுமதிக்கப்படுவர் .அதன்படி கிறிஸ்துமஸ்இ ஆங்கில புத்தாண்டு விழாவை முன்னிட்டு இன்று முதல் ஜன.16 வரை அனைத்து நாட்களிலும் அணையை பார்க்க பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். நுழைவுக்கட்டணமாக தலா ரூ.25 வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை ஆனுமதி வழங்கப்படுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.