கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டும் என்று கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக கட்டிட தொழிலாளர் மத்திய சங்கத்தைச் சேர்ந்த பொன்குமார் உயர்நீதிமன்றமதுரைக் கிளையில், கேந்திரிய வித்யாலயா கற்றல் விதிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என திருத்தம் செய்யக் கோரி தொடர்ந்த பொதுநல வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் 2006ம் ஆண்டு தமிழ்நாடு கல்வி சட்டத்தின்படி 1 முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடம் என்று உள்ளது எனவும் ஆனால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி, விருப்ப பாடமாக மட்டுமே உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டது எனவும் அங்கு படிக்கும் மாணவர்கள் 50% வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும், விருப்ப படாமாக தமிழ் கற்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள்,
பிரஞ்சு, ஜெர்மன், பெங்காலி உள்ளிட்ட மொழிகளை கற்கலாம் ஆனால், தமிழ் நாட்டில் தமிழ் மொழியை கற்க கூடாதா என கேள்வி எழுப்பினர். மேலும் இது போன்ற பதிலை ஏற்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.
மேலும் பிரதமர் மோடி, தாய் மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என கூறுகிறார் என்றும், ஆனால், இந்தி, ஆங்கிலத்தை மட்டுமே படிக்க வேண்டும் என பள்ளிகளில் கட்டாயபடுத்துகின்றனர் எனவும்,
தாய் மொழியில் கல்வி கற்கும் ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளனர் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.